Pages

Wednesday, August 18, 2010

ஏழைப் பெண்ணை M.B.B.S. படிக்க வைக்கும் பொது மக்கள்!

தமிழ்நாட்டின் நம்பர்ஒன்  மருத்துவக் கல்லூரியில் மகளுக்கு இடம் கிடைத்திருக்கிறது. ஆனால் படிக்க வைக்கத்தான் கையில் பணமில்லை. கடவுள் விட்ட வழி என இருந்த ஏழை தொழிலாளி அன்பழகனுக்கு கடைசியாக கைகொடுத்தது கடவுள் இல்லை, அவ்வூர் பொதுமக்கள்தான்.

குடும்பத்துக்கு இவ்வளவு என்று தொகையை நிர்ணயம் செய்து டாக்டராக வேண்டும் என்ற ஏழைப்பெண் காயத்ரியின் கனவை நனவாக்கி இருக்கின்றனர் பரமத்தி வேலூர் சுல்தான்பேட்டை பகுதி மக்கள்!!

குடிசை என்று கூட சொல்ல முடியாத தென்னங்கீற்றால்  ஆன ஒரு கொட்டகைதான் காயத்ரியின் வீடு. வீட்டின் விளையுயர்ந்த ஒரே பொருள் கலைஞர் கொடுத்த இலவச டி.வி. வீட்டில் அப்பா அன்பழகன், அம்மா ராணி கூடப் பொறந்த இரண்டு தம்பிகள். அப்பா தப்பு அடிக்கும் தொழில் செய்கிறார். வேலை இல்லாத நாட்களில்  கட்டிட வேலைக்கு செல்கிறார். தினமும் 150 ரூபாய் வருமானம். சாப்பாட்டுக்கே வழியில்லாததால் வீட்டில் 5 -வது, 6 -வதுக்கு மேல் யாரும் படிக்கவில்லை காயத்ரியை நன்றாக படிக்கவைக்க ஆசைப்பட்டார் அன்பழகன்.

"பள்ளிக்கூடத்தில் பழைய சோறும் ஊறுகாயும், கொண்டுவரும் என்னைப் போலுள்ள மாணவிகளோடு, பணக்காரப் பெண்கள் பழகுவதற்கே தயங்குவார்கள். எங்களைவிட்டு ஒதுங்கியே இருப்பார்கள். அவர்கள் என்பக்கம் வர வேண்டும் என்பதற்காகவே கஷ்டப்பட்டு படிப்பேன். கடைசியில் என் படிப்பு திறமையைப் பார்த்து எல்லோரும் என்னிடம் வந்து பழகினார்கள். பத்தாம் வகுப்பில் 473  மார்க் வாங்கினேன். டாக்டராக வேண்டுமென +2 -வில் சயின்ஸ் குரூப் எடுத்தேன், 1153 மார்க் வாங்கிய எனக்கு சென்னை மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டது." என்று நெகிழ்ச்சியாக சொல்கிறார் சாதனைப் பெண் காயத்ரி.

இடம் கிடைத்த சந்தோசத்தில் இவர் இருக்க, இவரது அப்பா கவலையில் ஆழ்ந்துவிட்டார், எப்படி மகளைப் படிக்கவைப்பது என்று. இவர்களது குடும்ப நிலையைப் பார்த்த அவ்வூர் மக்கள் எந்த யோசனையும் செய்யாமல் மனமுவந்து ஊர் முழுவதும் பணம் வசூலித்து கொடுத்து, "தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்பவர்களால்தான் இவ்வுலகம் நிலைபெற்றிருக்கிறது" என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.  இவர்கள் செய்த உதவியைப் பார்த்து நாமக்கல் நகராட்சி மன்றம் சார்பில் தலைவர், உபதலைவர், கவுன்சிலர்கள் என அனைவரும் சேர்ந்து ஒருநாள் சிட்டிங் பீஸ் 23,000 ரூபாயை  வழங்கி இருக்கிறார்கள்.

நகர நெரிசலி
ல் மனிதாபிமானம் நசுங்கி செத்தாலும், கிராமங்களில் அதற்க்கு இன்னும் ௨யிர் இருக்கிறது என்பதற்கு இன்று காயத்ரிக்கு உதவிய பரமத்தி வேலூர் சுல்தான்பேட்டை மக்கள் தான் சரியான உதாரணம்.

"உணர்ச்சிப்பெருக்கால் என் கண்கள் குளமாகின்றன.  பரமத்தி வேலூர் சுல்தான்பேட்டை மக்களை நினைத்து"

Wednesday, August 11, 2010

நமது தேசத்தின் சில அவலங்களைப் பட்டியலிட்டுள்ளேன். படித்துப்பாருங்கள்!

1. அரிசியின் விலை கிலோ 44 ரூபாய். ஆனால் சிம் கார்டு இலவசமாகக் கிடைக்கிறது.

2. பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்.

3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்.

4. பிஸ்ஸா வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில் பாதியளவு வேகத்தில்கூட அதாவது பாதி நேரத்தில்கூட ஆம்புலன்சும், தீயனைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை!

5. ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட அறப் பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை!

6. நாம் அணியும் உள்ளாடைகளும், ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பெற்ற கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் நாம் உண்ணும் காய்கற்களும், பழங்களும் நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகின்றன.

7. நாம் குடிக்கும் லெமன் ஜீஸ்கள் செயற்கையான இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான
லெமனில் (எலுமிச்சையில்) தயாரிக்கப்படுகிறது.

8. மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர்
இன்று கல்லூரிகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

9. கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்துவிற்றால் வரியில்லை அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்துவிற்றால் வரி உண்டு!

10. பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலாமவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை!

11. குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டுவந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்!

இந்த நிலை மாறுவது எப்போது?

Saturday, August 7, 2010

என்னுடைய முதல் பதிவு

வணக்கம்,

நானும் நீண்ட நாட்களாக பதிவுலகில் பதிவிடவேண்டும் என்று எண்ணியிருந்தேன், ஆனால் என்னுடைய சோம்பரிதனம் அதை செயல்படுத்த முடியாமல் என்னை தடுத்து இறுதியாக இன்று என்னுடைய முதல் பதிவை தொடங்கியிருக்கேறேன். இந்த பதிவு பக்கங்களில் எனக்கு பிடித்தவற்றையும், நான் படித்தவற்றையும், பார்த்தவைகளையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.
நன்றியுடன்
சொல்வலவன்.