Pages

Wednesday, August 18, 2010

ஏழைப் பெண்ணை M.B.B.S. படிக்க வைக்கும் பொது மக்கள்!

தமிழ்நாட்டின் நம்பர்ஒன்  மருத்துவக் கல்லூரியில் மகளுக்கு இடம் கிடைத்திருக்கிறது. ஆனால் படிக்க வைக்கத்தான் கையில் பணமில்லை. கடவுள் விட்ட வழி என இருந்த ஏழை தொழிலாளி அன்பழகனுக்கு கடைசியாக கைகொடுத்தது கடவுள் இல்லை, அவ்வூர் பொதுமக்கள்தான்.

குடும்பத்துக்கு இவ்வளவு என்று தொகையை நிர்ணயம் செய்து டாக்டராக வேண்டும் என்ற ஏழைப்பெண் காயத்ரியின் கனவை நனவாக்கி இருக்கின்றனர் பரமத்தி வேலூர் சுல்தான்பேட்டை பகுதி மக்கள்!!

குடிசை என்று கூட சொல்ல முடியாத தென்னங்கீற்றால்  ஆன ஒரு கொட்டகைதான் காயத்ரியின் வீடு. வீட்டின் விளையுயர்ந்த ஒரே பொருள் கலைஞர் கொடுத்த இலவச டி.வி. வீட்டில் அப்பா அன்பழகன், அம்மா ராணி கூடப் பொறந்த இரண்டு தம்பிகள். அப்பா தப்பு அடிக்கும் தொழில் செய்கிறார். வேலை இல்லாத நாட்களில்  கட்டிட வேலைக்கு செல்கிறார். தினமும் 150 ரூபாய் வருமானம். சாப்பாட்டுக்கே வழியில்லாததால் வீட்டில் 5 -வது, 6 -வதுக்கு மேல் யாரும் படிக்கவில்லை காயத்ரியை நன்றாக படிக்கவைக்க ஆசைப்பட்டார் அன்பழகன்.

"பள்ளிக்கூடத்தில் பழைய சோறும் ஊறுகாயும், கொண்டுவரும் என்னைப் போலுள்ள மாணவிகளோடு, பணக்காரப் பெண்கள் பழகுவதற்கே தயங்குவார்கள். எங்களைவிட்டு ஒதுங்கியே இருப்பார்கள். அவர்கள் என்பக்கம் வர வேண்டும் என்பதற்காகவே கஷ்டப்பட்டு படிப்பேன். கடைசியில் என் படிப்பு திறமையைப் பார்த்து எல்லோரும் என்னிடம் வந்து பழகினார்கள். பத்தாம் வகுப்பில் 473  மார்க் வாங்கினேன். டாக்டராக வேண்டுமென +2 -வில் சயின்ஸ் குரூப் எடுத்தேன், 1153 மார்க் வாங்கிய எனக்கு சென்னை மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டது." என்று நெகிழ்ச்சியாக சொல்கிறார் சாதனைப் பெண் காயத்ரி.

இடம் கிடைத்த சந்தோசத்தில் இவர் இருக்க, இவரது அப்பா கவலையில் ஆழ்ந்துவிட்டார், எப்படி மகளைப் படிக்கவைப்பது என்று. இவர்களது குடும்ப நிலையைப் பார்த்த அவ்வூர் மக்கள் எந்த யோசனையும் செய்யாமல் மனமுவந்து ஊர் முழுவதும் பணம் வசூலித்து கொடுத்து, "தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்பவர்களால்தான் இவ்வுலகம் நிலைபெற்றிருக்கிறது" என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.  இவர்கள் செய்த உதவியைப் பார்த்து நாமக்கல் நகராட்சி மன்றம் சார்பில் தலைவர், உபதலைவர், கவுன்சிலர்கள் என அனைவரும் சேர்ந்து ஒருநாள் சிட்டிங் பீஸ் 23,000 ரூபாயை  வழங்கி இருக்கிறார்கள்.

நகர நெரிசலி
ல் மனிதாபிமானம் நசுங்கி செத்தாலும், கிராமங்களில் அதற்க்கு இன்னும் ௨யிர் இருக்கிறது என்பதற்கு இன்று காயத்ரிக்கு உதவிய பரமத்தி வேலூர் சுல்தான்பேட்டை மக்கள் தான் சரியான உதாரணம்.

"உணர்ச்சிப்பெருக்கால் என் கண்கள் குளமாகின்றன.  பரமத்தி வேலூர் சுல்தான்பேட்டை மக்களை நினைத்து"

6 comments:

vr murugesan said...

ஒவ்வொரு மனிதனும் இதை நினைக்கனும்

ஜெயந்த் கிருஷ்ணா said...

இந்த செய்தியை கேட்க்கும் போது மிகவும் மகிழ்வாக உள்ளது அன்பரே...

என்னால் ஏதாவது செய்ய முடியுமா என்று யோசித்து இவர்களுக்காக ஒரு பதிவும் போட்டேன்... இதை பார்த்து என் நண்பர்கள் சிலர் அவர்களை அழைத்து பேசி உதவியும் செய்தனர்... மேலும் அடுத்த வருட படிப்பிற்கு உதவி தேவை என்றால் தவறாமல் அழையுங்கள் என்று என்று கூறி தொடர்பு என்னையும் கொடுத்துள்ளனர்..

பதிவின் இணைப்பு.. http://verumpaye.blogspot.com/2010/07/blog-post_09.html

Job help India abroad said...

மானுடம் இன்னும் முழுதாகச்சாகவில்லை . மனிதன் இருக்கும் வரை மனிதம் இருக்கும் .
ஏதோவொரு மூலையிலாவது .
-பாலா

nvnselvan said...

Nalla padaippu, increase your postings.

Naren Karthik said...

கடவுள் இல்லை என்று சொல்வதற்கு பதிலாக அந்த ஊர் மக்களை ஏன் கடவலாக நினைக்க கூடாது? உதவி செய்யும் உள்ளங்களே கடவுள. தன்னலம் அற்ற மனிதனே கடவுள.

Unselfishness is God - Swami Vivekananda

நகர நெரிசலில் மனிதாபிமானம் மட்டும் நசுங்கி சாகவில்லை, மனிதாபிமானம் கொண்ட மனிதனும் தான் !!!

Ramesh DGI said...

I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Tamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News

Post a Comment